Home » , » அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு.

அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு.

Written By stronlinefansworld on 20 June 2012 | 18:20

அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடைய எந்த படம் வெளிவந்தாலும் அதை முதல்நாளில், முதல்ஷோவில் பார்த்துவிடுவார். அந்தளவுக்கு அஜித்தின் தீவிர வெறியரான அவர் இப்போது ஒருபடி மேலே போய் அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். 

புதுமுகம் விஜய் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் வாலு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கூடவே காமெடியில் சந்தானம் கலக்க வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. 

படத்தின் கதைப்படி சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் அஜித்தின் பில்லா-2 படத்தை முதல்நாளில் போய் தியேட்டரில் பார்க்கிறார். இந்தக்காட்சியை சென்னை கமலா தியேட்டரில் வைத்து எடுத்தனர். அப்போது தான் சிம்பு அஜித்தின் பில்லா-2 கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து இருக்கிறார். பிறகு ஹன்சிகாவுடன் அமர்ந்து படத்தையும் பார்க்கிறார். இதைதான் படமாக்கி இருக்கிறார்கள். கூடவே படத்தில் அஜித் ‌தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும், அவரை பற்றி பஞ்ச் டயலாக் கொடுத்து புகழ்ந்து தள்ளியுள்ளாராம்.
source : DINAMALAR
Share this article :

No comments:

Post a Comment

 

Copyright © 2012. STR HERE - stronlinefans.co.cc is not official Site of Silambarasan. This site is run by Silambarasan Fans - All Rights Reserved